Header Ads

  • BREAKING



    காஷ்மீரில் நடமாடும் 200 பயங்கரவாதிகள் காவல்துறை உயர் அதிகாரி அதிர்ச்சித் தகவல்.


    காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் 200 பயங்கரவாதிகள் இயங்கி வருவதாக அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் மாநில ஐ.ஜி.யான கிலானி,  கடந்த ஒரே வருடத்தில் 95 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகக் கூறினார். தற்போது காஷ்மீரில் 200 பயங்கரவாதிகள் இயங்கி கொண்டிருப்பதாகவும், அவர்களில் 110 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அவர் தெரிவித்தார். பணத்தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மையே இதற்குக் காரணம் என்று கிலானி  மேலும் குறிப்பிட்டார். அண்மைக் காலத்தில் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் 13 வங்கி கொள்ளை சம்பவங்களும், 9 வங்கி கொள்ளை முயற்சிகளும் நடந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad