2016-17 நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு வரத்து 60.1 பில்லியன் டாலர்கள்.
நாட்டின் அன்னிய நேரடி முதலீடு வரத்து 2016-17-ம் ஆண்டில் 8% அதிகரித்து புதிய உச்சமான 60.1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
தொழில் வளர்ச்சித்துறை இதனை தெரிவித்தபோது, “அரசின் தைரியமான, தீவிரமான கொள்கை சீர்த்திருத்தங்களினால் அன்னிய நேரடி முதலீடு வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து தற்போது அயல்நாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது” என்று கூறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் எஃப்.டி.ஐ ஈர்க்கும் 21-துறைகளில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டிலேயே பாரம்பரிய துறைகளான ரயில்வே உள்கட்டமைப்பு, ராணுவம் போன்றவற்றில் தாராளமயக் கொள்கைகள் புகுத்தப்பட்டன. இதனுடன் மருத்துவ உபகரணங்கள், கட்டுமான வளர்ச்சி ஆகிய துறைகளிலும் மேற்கொண்ட சீர்த்திருத்தங்கள் எஃப்.டி.ஐ. வரத்துக்குக் காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை