30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ராணுவத்திற்கு புதிதாக 2 பீரங்கிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன..
1986ஆம் ஆண்டில் சுவீடன் போஃபர்ஸ் பீரங்கிகளை கொள்முதல் செய்வதில் பேரம் பேசப்பட்டு ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி தேர்தலில் தோல்வியடையும் நிலைக்கு போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 30 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவிலிருந்து இந்திய ராணுவத்திற்கு பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. படைபலத்தை அதிநவீனமாக்கும் திட்டத்தின் கீழ் 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 5 வகையான பீரங்கிகளை வாங்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாகவே, 700 மில்லியன் டாலர்கள் செலவில், எம்-777 ரக பீரங்கிகளை வாங்க இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் அடிப்படையில் 2 எம்-777 ரக பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. 30 கிலோமீட்டர் தூரம் வரை சுடும் திறன்கொண்ட இந்த பீரங்கிகள், சீனாவுக்கு எதிராக உயரமான இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றவை. இதில் முதல்கட்டமாக 2 பீரங்கிகள் வந்துள்ள நிலையில், மேலும் 23 பீரங்கிகள் இதேபோல இறக்குமதி செய்யப்பட உள்ளன. மேலும் 120 பீரங்கிகள் மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டத்துடன் இணைந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை