Header Ads

  • BREAKING



    காவலர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு: 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு.


    தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரர் என 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன.
    இதனை நிரப்புவதற்காக தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்துகிறது. 32 மாவட்டங்களில் 410 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக 6 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.காலை 10 மணிக்குத் தொடங்கி 11.20 மணிக்கு தேர்வு முடிவடைந்து விடும். சென்னையில் 56 மையங்களில் நடைபெற உள்ள தேர்வுக்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த தேர்வை சுமார் ஆறரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிவருகின்றனர். இந்த தேர்வில் பெண்கள் மட்டுமே ஒன்றரை லட்சம் பேர் எழுதிவருகின்றனர். பெண்கள் அதிகளவில் பங்குபெறுவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே அதிகம் என்றும், இந்த தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்கள் 50 பேர் எழுதிவருவதாகவும் சீருடை பணியாளர் வாரியம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad