சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார்.
விவேகானந்தா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், 2016 – 17 -ம் கல்வி ஆண்டில் படிப்பை முடித்த ஆயிரத்து 225 பேருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். பல்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்த 64 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.விழாவில் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ்களில், துணைவேந்தர் கைழுத்திடும் இடத்தில் கூட்டுநர் குழு தலைவர் சுனீல் பாலிவாலின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது.
கருத்துகள் இல்லை