Header Ads

  • BREAKING



    ராணுவ வீரரைக் கடத்திக் கொன்ற 3 பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு.


    இந்திய ராணுவ வீரரைக் கடத்தி, கொன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த, உமர் ஃபயாஸ் என்ற ராணுவ வீரர் விடுப்பில் இருந்தபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவரைக் கடத்திச்சென்றனர். துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உமர் ஃபயாஸின் உடல், கடந்த புதன் கிழமை சோஃபியான் மாவட்டம் ஹர்மென் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ராணுவ வீரரைக் கடத்தி கொலை செய்த ஆறு தீவிரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளைச் சேர்ந்த மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு சோஃபியான் மாவட்ட போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad