Header Ads

  • BREAKING



    ஆரணியாற்றின் கரையோரம் காலாவதியான 3 டன் உணவு பொருட்களை புதைத்த மர்ம நபர்கள்.


    திருவள்ளூர் அருகே ஆரணியாற்றின் கரையோரம் காலாவதியான 3 டன் உணவு பொருட்களை புதைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். காட்டூர் அருகேயுள்ள கடப்பாக்கம் மற்றும் தத்தைமஞ்சி கிராம பகுதிகளில், ஆரணி ஆற்றங்கரையில் சுமார் 3 டன் அளவிலான காலாவதியான மாட்டிறைச்சி, மீன், பன்றி இறைச்சி, சப்பாத்தி உள்ளிட்ட பலவகை உணவு பொருட்களை மர்ம நபர்கள் புதைத்துவிட்டு சென்றுள்ளனர் . அதைக்கண்ட பொதுமக்கள் சுகாதார துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த சுகாதார துறையினர் கலாவதியான உணவு பொருட்கள் அடங்கிய குவியலை பிரித்து, அதிலிருந்த பச்சைப்பட்டாணி, மக்கச்சோளம் உள்ளிட்டவற்றை உலர வைத்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். உணவு பொருட்களை யாரேனும் எடுத்து சென்றிருந்தால், அவற்றை உண்ண வேண்டாம் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உணவு பொருட்களை புதைத்த மீஞ்சூரை சேர்ந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad