Header Ads

  • சற்று முன்



    100 தானியங்கி பீரங்கிகளை தயாரிப்பதற்கான ரூ.4,500 கோடி ஒப்பந்தம்.


    எல்&டி நிறுவனமானது, பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கான தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்த மத்திய அரசு, இதற்காக டாடா, ரிலையன்ஸ், எல்&டி உள்ளிட்ட சில முக்கிய நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து வந்தது. இதன் முதற்கட்டமாக 100 தானியங்கி பீரங்கி வாகனங்களை தயாரித்துக் கொடுப்பதற்கான 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் எல்.&டி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. கே9 வஜ்ரா-டி என்ற பீரங்கி வாகனங்களை அடுத்த 42 மாதங்களுக்குள் இந்திய ராணுவத்திடம் தயாரித்து ஒப்படைக்க எல்.&டி முடிவு செய்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad