Header Ads

  • BREAKING



    கோடம்பாக்கத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.


    சென்னை கோடம்பாக்கத்தில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை கோடம்பாக்கத்தில் 45 கோடி ரூபாய்க்கு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    கோடம்பாக்கம் ஜக்ரியா காலனி பகுதியில் தண்டபாணி என்பவர் ராமலிங்கா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார். போலீசாருக்கான சீருடைகளும், திரைப்படத் துறையினருக்கான போலீஸ் உடைகளும் இங்கு விற்பனையாகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை தனிப்படை போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 45 கோடி ரூபாய்க்கு கட்டுக்கட்டாக பழைய 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
    இந்த தொகை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வருமான வரித்துறையிடம் இந்தப் பணத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, துணிக்கடை உரிமையாளரான தண்டபாணியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad