Header Ads

  • BREAKING



    சென்னை விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது – 2 பேர் கைது.


    சென்னை விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு செல்லும் விமானம் மூலம் பிரவுன் சுகர் போதைப் பொருளைக் கடத்த முயற்சிப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று தீவிர சோதனை நடத்திய அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் 2 கிலோ பிரவுன் சுகர் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர்கள் தேவகோட்டையைச் சேர்ந்த ராஜூதீன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அபூபக்கர் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad