Header Ads

  • BREAKING



    மும்பை வருமான வரித்துறை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் கைது.


    லஞ்சம் பெற்ற புகாரில், மும்பை வருமான வரித்துறை ஆணையர் உள்ளிட்ட 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறை ஆணையராக இருக்கும் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில்,சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒன்றரை கோடி ரூபாய் பிடிபட்டது. இதைத் தொடர்ந்து மும்பை வருமான வரித்துறை ஆணையர் ராஜேந்திர பிரசாத்தும், வருமான வரித்துறை அதிகாரி ஒருவரும் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், 4 பேரை மும்பையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். வரி செலுத்துவதிலிருந்து முறைகேடாக விலக்களிக்க கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad