Header Ads

  • BREAKING



    சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் 6 அடி ஆழ திடீர் பள்ளம்.


    சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒதுக்கிவிடப்பட்டது. பள்ளம் உருவான இடத்தை சரிசெய்யும் பணியில் மெட்ரோ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் தோண்ட அதிநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தியதே பள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad