9ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது.
சென்னை புரசைவாக்கத்தில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். பக்கத்து வீட்டு பெரியவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னை புரசைவாக்கம் ஆர்.கே புரம் பகுதியை சேர்ந்த மாரி என்ற 50 வயது நபர் தான் 9 ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வயிற்று வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் மாரி என்பவர் அந்த மாணவியை பொம்மை தருவதாக தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று மாணவியிடம் அத்து மீறியிரூப்பதும் தெரியவந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தீர்த்துக்கட்டிவிடுவதாக மாணவியை மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாரி மீது வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் மாரியை கைது செய்யாமல் இழுத்தடித்தை தொடர்ந்து பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து சிறுமியின் வாழக்கையை சீரழித்த காமக்கொடூரன் மாரியை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே ஒரு சிறுமியிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தபோது மாரிக்கு ஆதரவாக சிலர் போலீசாரிடம் பேசி அவரை தப்பிக்க வைத்ததாக கூறப்படுகின்றது.
காவல்துறையினர் மற்ற வழக்குகளை போல இல்லாமல் பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை