Header Ads

  • சற்று முன்



    பல் மருத்துவ பட்டமேற்படிப்பு சென்டாக் கலந்தாய்வு: 50 பேர் பங்கேற்பு.


    பல்மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை (PG-NEET) கலந்தாய்வு காலாப்பட்டு பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மொத்தம் 26 இடங்களுக்கு 50 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.
    மருத்துவ, பல் மருத்துவ பட்டமேற்படிப்பு அரசு ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மே 2-ம் தேதியும், மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மே 4, 5 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடக்கிறது.
    இதில் பல் மருத்துவ மேற்படிப்புக்கு 50 பேரும், மருத்துவ பட்டமேற்படிப்புக்கு 267 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    இவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி சென்டாக் அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது.

    புதுச்சேரி மாநிலத்தில் மகாத்மா காந்தி அரசு பல்மருத்துவக் கல்லுாரி, மாஹே பல் மருத்துவக் கல்லுாரி, இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரிகள் என, மூன்று கல்லுாரிகளில் முதுநிலை பல்மருத்துவ படிப்புகள் உள்ளன.
    இந்த முதுநிலை பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இடங்களை அந்தந்த கல்லுாரிகளே நிரப்பிக் கொள்வது வழக்கம். இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு முதன் முறையாக சென்டாக் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கான சென்டாக் கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு நீட் தரவரிசையின்படி 0132 முதல் 3851 வரையிலும், பின்னர் 11 மணிக்கு 4060 முதல் 10381 வரை எடுத்த மாணவர்களுக்கும் நடைபெற்றது.

    அரசு கல்லுாரியான மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 13 இடங்களில் 6 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லுாரியை பொறுத்தவரை, மாஹே பல் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 18 இடங்களில் 8 இடங்கள், இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 24 இடங்களில் 12 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 53 இடங்களில் 26 முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கான மாணவர் கலந்தாய்வு நடைபெற்றது . இதில் 50 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad