Header Ads

  • BREAKING



    இரட்டை இலைச் சின்னம்: டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு.


    புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற குற்றச்சாட்டின் கீழ் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.


    இதே குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே, அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் மீது தில்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறையும் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்துள்ளது.

    தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட தினகரன், நேற்று மாலை போலிஸ் காவல் முடிந்து தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    அவருக்கு 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad