Header Ads

  • BREAKING



    கனடாவில் கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள்.


    கனடாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளுக்காக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது. அந்நாட்டில் கியூபெக் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் உள்ள மாகாணங்களில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. முக்கிய சாலைகளும், பாலங்களும் மழைநீரில் மூழ்கடிக்கப்பட்டன. கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த 700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். சில இடங்களில் மழை நீடிப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்காக கூடுதல் படைகள் அனுப்பப் பட்டுள்ளதாகவும் கனடா பிரதமர் ட்ரூடு ((Trudeau)) தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad