Header Ads

  • BREAKING



    தெற்காசிய செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்


    தெற்காசிய நாடுகள் பயன்பெறுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-9 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுவதையொட்டி, ராக்கெட்டை ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.தெற்காசிய நாடுகளுக்கு சேவை அளிக்கும் வகையில் ஜிசாட்-9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசியாவில் பாகிஸ்தானைத் தவிர மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 230 கிலோ எடைகொண்ட ஜிசாட்-9 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பாண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது. தெற்காசிய நாடுகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், தொலைத்தொடர்பு சேவையையும் வழங்கும் இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்9 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்த நிலையில், 28 மணி நேர கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 12.57 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எஃப்9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad