வரும் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த நடவடிக்கை – நாராயணசாமி.
புதுச்சேரியில் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரியை நடைமுறைப்படுத்த புதுச்சேரி மாநிலம் தயாராகி வருவதாக தெரிவித்தார். மேலும், வரும் 30ஆம் தேதி தன் பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பவர்கள் தனக்கு எதிரிகள் எனவும், அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்களை பொதுப்பணித்துறை அமைச்சர், நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து அப்புறப்படுத்த வேண்டும் என தான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை