Header Ads

  • BREAKING



    ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் – தீயணைப்புத் துறை இயக்குநராக ஜார்ஜ் நியமனம்.




    ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு இடமாற்றம் மற்றும் புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநராக எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவலர் பயிற்சி கூடுதல் டிஜிபியாக குடவாலாவும், மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபியாக மகேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக சாரங்கனும், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணனும், சி.ஐ.டி. குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக தாமரைக் கண்ணனும் பொறுப்பேற்க உள்ளனர். விழுப்புரம், நெல்லை, திருவள்ளூர், நாமக்கல், ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகரில் இடைதேர்தல் நடைபெறுவதாக இருந்தபோது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டார். அதேபோன்று இணை ஆணையர், கூடுதல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு தற்போது புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad