Header Ads

  • BREAKING



    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய சீனா ஆர்வம்.


    பெய்ஜிங் : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சீனா மத்தியஸ்தம் செய்ய இபோது ஆர்வம் கொண்டுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்காக சீன தற்போது அங்கு 50 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.


    இதுகுறித்து சீனாவில் இருந்து வெளியாகும் குலோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: - பொதுவாக சீனா மற்ற நாட்டு விவகாரங்களில் தலையீடுவதில்லை.

    ஆனால் சீனாவின் வெளிநாட்டு முதலீடுகளை பாதுகாப்பதில் சீன நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்தியா, பாக்கிஸ்தானுடனான காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு பிராந்திய மோதல்களைத் தீர்க்க சீனா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மியான்மர் மற்றும் பங்களாதேஷ் இடையே ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினையில் சீனா மத்தியஸ்தம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad