Header Ads

  • BREAKING



    வாட்ஸ்ஆப் குழுவில் பிரதமர் மோடியை விமர்சித்து படம் பதிவிட்ட 2 பேர் கைது.


    பிரதமர் மோடியை விமர்சித்து, சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிடப்பட்டது தொடர்பாக, வாட்ஸ்ஆப் அட்மின் உள்பட 2 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தகவல்களும், செய்திகளும் உடனுக்குடன் பதிவிடப்பட்டு கவனத்தை ஈர்க்கும் அதே நேரத்தில், பலர் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எனப்படுவோர் அரசியல் தலைவர்களையும், பிரபலங்களையும் கேலியாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் வட கர்நாடக மாவட்டத்தைச் சேர்ந்த வாட்ஸ் ஆப் அட்மின் கிருஷ்ணா என்பவரையும், அவர் நடத்தி வரும் குழுவின் உறுப்பினர் கணேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணா நடத்தி வரும் The Balse Boys என்ற வாட்ஸ் ஆப் குழுவில், பிரதமர் மோடியை விமர்சித்து புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதே வாட்ஸ் ஆப் குழுவில் உறுப்பினராக இருக்கும் மற்றொரு நபர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணா மற்றும் கணேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை மற்ற குழுக்களுக்கு பகிர்ந்த பாலகிருஷ்ணா என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad