Header Ads

  • BREAKING



    மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தவறியதால் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்: சென்னை உயர்நீதிமன்றம்.


    தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கில் தனியார் கல்லூரிகளிடம் இருந்து ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை எனவும் 2000ம் ஆம் ஆண்டு முதல் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெறவில்லை என்பதை கண்டித்து ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    மேலும் 50 சதவீத இடங்களை கலந்தாய்வு மூலமே நிரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீதத்தை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து மருத்துவர்கள் வித்யா ஷரோண், காமராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
    வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை தமிழக அரசுக்கு ஒதுக்குடு செய்ய வேண்டும் என்றும், இந்த 50% இடங்களையும், கலந்தாய்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், தமிழக அரசுக்கு இடங்களை ஒதுக்கத் தேவையில்லை என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை இடங்களை இணையதளங்களில் வெளியிட்டு வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2000ஆவது ஆண்டு முதல், 50 சதவீத இடத்தைப் பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad