Header Ads

  • BREAKING



    பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 123% அதிகரிப்பு: பங்குகளின் விலையும் அதிகரித்தது.


    பாரத ஸ்டேட் வங்கியின் 4ம் காலாண்டு முடிவுகளில், வங்கியின் நிகர லாபம் 123% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வங்கியின் வட்டி வருவாய் 17.33% அதிகரித்து ரூ.5ஆயிரத்து 401 கோடியிலிருந்து ரூ.18ஆயிரத்து 71கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாரத ஸ்டேட்வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.
    வட்டியில்லா வருமானம் 2.43% குறைந்துள்ளது இருப்பினும் அது லாபத்தில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
    மூதலீடுகளை விற்பனை செய்ததன் மூலம் பெறப்பட்ட லாபம், கட்டணங்கள், அந்நிய செலவாணி மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் விற்பனை மூலம் நிகர லாபத்தை உயர்த்த முடிந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
    வங்கியின் வாராக் கடன் சதவீதம் சிறிய இறக்கம் கண்டு, 6.90 % உள்ளது.
    பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் அதிகரித்துள்ள செய்தி வெளியானதிலிருந்தே அந்த வங்கியின் பங்குகள் நல்ல அளவில் இன்று வர்த்தகமாகி வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad