அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் முதலாவது அலகு பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி
அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முதலாவது அலகின் கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை