Header Ads

  • BREAKING



    பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்தி வைப்பு.


    பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வருமான வரித்துறை ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. ஆதார் எண்ணை கட்டாயமாக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தில் ஆதார் எண்ணை கட்டாயமாக்க சட்டமியற்றியது குறித்து விளக்கம் அளித்துள்ளது.வரி ஏய்ப்பை தடுக்க ஆதார் எண் மிகச்சிறந்த சாதனமாக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்த்தரப்பில் வாதத்தை முன்வைத்த மூத்த வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய உத்தரவு மீறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று இரு தரப்பு வாதங்களும் நிறைவுக்கு வந்ததையடுத்து தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad