ஆதார் தகவல்களை ஒருபோதும் திருட முடியாது – தனிநபர் அடையாள ஆணையம்.
வைரஸ்கள் மூலம் ஆதார் தகவல்களை தாக்கி விட முடியாது என்று தனிபர் அடையாள ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது. ரேன்சம்வேர் வன்னாகிரை எனப்படும் வைரஸ் தாக்குதல், உலக நாடுகளின் இணைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் மூலம் 114 கோடி இந்திய குடிமக்களின் ஆதார் தகவல்களை எளிதில் தாக்கி திருடிவிட முடியும் என்று அஞ்சப்பட்ட நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா, ஆதார் தகவல்கள் என்கிரிப்ட் எனப்படும் குறியாக்கம் அடிப்படையிலான வடிவமைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இதில் பாதுகாப்புக் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை