Header Ads

  • BREAKING



    அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்-மத்திய அரசு முடிவு


    முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கான கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினரின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பட்டியலிட்டார்.
    முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15 ம் தேதி, முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 100 மாவட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மாணவர்களின் கல்வி மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad