நடிகர் சங்கக் கட்டிடம், சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்படுவதாக வழக்கு – ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் சங்கக் கட்டிடம் அமையவுள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 கிரவுண்டு சாலைப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சாரங்கன் என்பவர் தொடர்ந்த வழக்கின் பேரில் கட்டுமானப் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
நடிகர் சங்கக் கட்டிடம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர். இந்நிலையில் ஆய்வுக் குழுத் தலைவர் இளங்கோவன்
மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கக் கட்டிடம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்டோரும் மனுதாரர் தரப்பினரும் உடன் இருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வுக்குழுவினர் வரும் 29-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு அடுத்த மாதம் 2-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை