அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி.
கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டது. 20 மீட்டர் நீளம் கொண்ட மீடியம் ரேஞ்ச் வகையைச் சேர்ந்த அக்னி-2 ஏவுகணை, திட எரிபொருட்கள் மூலம் இரண்டு கட்டங்களில் இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டின் இலக்கையும் கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏ பி ஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை