Header Ads

  • BREAKING



    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு.


    புதுதில்லி:ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

    கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் , தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
    இதுதொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.
    அதில், குற்றவாளிகள் குற்றம் செய்ததற்குப் போதிய முகாந்திரம் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
    இதையடுத்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad