Header Ads

  • BREAKING



    சென்னையில் இருந்து டெல்லிக்கு பெரிய விமானத்தை இயக்குகிறது ஏர் இந்தியா.


    சென்னையில் இருந்து டெல்லிக்கு 342 பயணிகள் செல்லும் பெரிய விமானத்தை‘ஏர்-இந்தியா’ நிறுவனம் இயக்குகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட ஊர்களுக்கு 168 பயணிகள் செல்லும் வகையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக 342 பேர் பயணம் செய்யும் வகையில் பெரிய விமானத்தை ஏர் இந்தியா இயக்குகிறது. இந்த விமானம் காலை 8.30 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த, 9.30 மணிக்குடெல்லிக்கு புறப்பட்டு செல்கிறது. இரவு 8.30க்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் 9.30 மணிக்கு டெல்லிக்கு செல்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad