அமெரிக்காவின் 5 மாகாணங்களை பந்தாடிய சூறாவெளி.
அமெரிக்காவின் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகிய மாகாணங்களில், வீசிய கடுமையான சூறாவளியால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் வீசிய சூறாவெளி காற்றுடன் இணைந்து பலத்த மழையும் கொட்டியது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகள் மற்றும் கார்களின் மீது விழுந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் கன மழையால் வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. ஆர்கன்சாஸ், மிசவுரி, மிசிசிபி மாகாணங்களில் வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் 6 பேர் இறந்தனர். இந்த சூறாவளிக்கு இதுவரை 14 பேர் பலியாகினர். 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை