அந்தமான் நிகோபர் தீவுப் பகுதியில் முன்கூட்டியே பருவமழை தொடங்கும்.
அந்தமான் நிகோபர் தீவுப் பகுதியில் இந்த வருடம் இரண்டு நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவ மழை ஏற்படுவதை பாதிக்கும் எல்-நினோ எனப்படும் கடல் வெப்பநிலை உயர்வு இந்த வருடம் பின்வாங்கியுள்ளது. வழக்கமாக, ஈரக்காற்றும் மழை மேகங்களும் அந்தமான் நிகோபர் பகுதியை அடைந்து ஜூன் 17 ஆம் தேதி அங்கு பருவமழை தொடங்கும். இந்தியப் பெருங்கடலில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழல் பருவமழைக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாக, வானிலை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு பருவமழை இரண்டு நாட்கள் முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானில் மழை பெய்யத் தொடங்கி இரண்டு வார காலத்திற்குள் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை