ஆந்திராவின் தலைமைச் செயலகத்தில் இணைய தாக்குதல்.
ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் உள்ள கணினிகள், இணைய தள தாக்குதலால் முடக்கப்பட்டன. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள ரேன்சம்வேர் வன்னாகிரை கணினி நிரல், ஆந்திர மாநிலம் வேலகபுடியில் அமைந்துள்ள அம்மாநில தலைமைச் செயலகத்தின் 20 கணினிகளை தாக்கியது.
கணினி தகவல்கள் முடக்கப்படுவதற்கு முன்னதாக விரைந்து பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள், தகவல்களை மீட்டெடுக்கவும், அவற்றை வேறு ஒரு சேமிப்பகத்தில் சேமிக்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் புதிய ஹார்ட் டிஸ்குகள் நிறுவப்படும் என்று தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை