ஆந்திராவில் வெயிலுக்கு 21 பேர் உயிரிழப்பு.
ஆந்திர மாநிலத்தில் வெயில் கொடுமையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் கத்திரி வெயில் வாட்டி எடுத்து வருகிறது. ஆந்திராவில் பெரும் பாலான இடங்களில் காலை 9 மணி முதலே அனல் காற்று வீசுகிறது. மதிய நேரத்தில் மிகவும் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இரவு 8 மணி வரை வெப்பக் காற்றின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
பிரகாசம், குண்டூர், கடப்பா, விஜயவாடா, கர்னூல், அனந்தபூர், சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று பல நகரங்களில் 44 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. சில இடங்களில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. நேற்று முன்தினம் கொளுத்திய வெயிலுக்கு ஆந்திர மாநிலத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை