Header Ads

  • BREAKING



    பாலாற்றின் குறுக்கே மேலும் 3 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.


    கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா வழியாக தமிழகத்தில் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. பாலாறு பன்மாநில நதி என்பதால், தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் நீர்சேமிக்கும் கட்டமைப்புகளை அமைக்க முடியாது. ஆனால், அதையும் மீறி குப்பம், சதானந்தசேரி உள்ளிட்ட 12 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இதனால், தமிழக பகுதிகளில் ஓடும் பாலாற்றுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே மூன்று தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிப்புப் பணியில் அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மத்திய அரசின் நிதியுதவியைப் பெறவும் ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தடுப்பணைகள் கட்டும் பட்சத்தில், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad