Header Ads

  • சற்று முன்



    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு.


    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில், சான்றிதழில் அவருக்கு பதிலாக, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கையொப்பம் இட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றும், எனவே பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க கோரி, அண்ணா பல்கலைகழக ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இதன் மீதான விசாரணை நேற்று நடந்தபோது துணைவேந்தர் இல்லாத சமயத்தில் பல்கலைகழக ஆட்சிமன்ற குழுவால் தேர்வு செய்யப்பட்ட நபர் சான்றிதழில் கையொப்பம் இடுவது சட்டவிரோதம் இல்லை என அரசு தரப்பு வாதிட்டது. இதன்பின்னர், மனு தாரரின் பதிலை கேட்ட நீதிபதி கோவிந்தராஜ், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad