Header Ads

  • BREAKING



    அரியலூரில் போலீசாரின் பாதுகாப்பையும் மீறிச் சென்று டாஸ்மாக் கடை சூறை.


    ஈச்சங்காடு கிராமத்தில் இயங்கி வரும் மதுக்கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த பலனும் கிடைக்காததால், ஆவேசத்துடன் அங்கு திரண்ட பெண்கள் உள்ளிடோர் மதுக்கடையை முற்றுகையிட்டனர்.தகவலறிந்து அங்கு திரண்ட போலீசார், டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், போலீசாரையும் மீறி, மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சூறையாடினர்.
    மதுக்கடையை சூறையாடிய பெண்கள், அங்கிருந்த மதுப்பாட்டில்களை அள்ளி வந்து, சாலையில் போட்டு சுக்குநூறாக உடைத்து ஆத்திரத்தை தீர்த்து கொண்டனர்.
    மதுக்கடையால், தங்கள் குடும்பங்கள் சீரழிந்ததாக குற்றம்சாட்டிய பெண்கள், எங்கள் கிராமத்தில் மதுக்கடையை எங்கு திறந்தாலும் அடித்து நொறுக்குவோம் என்றும் எச்சரித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad