Header Ads

  • BREAKING



    கதை இப்படி இருந்தால்தான் ஏற்பாராம் ஏ.ஆர்.ரகுமான்!.


    ஒரு கதை என்னைத் தூங்கவிடாமல் செய்தால் அந்தப் படத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன் என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
    லே மஸ்க் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்தை இயக்க அவர் மனைவி சாயிரா பானுதான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
    அவர் மேலும் கூறும்போது, ‘நான் இசை நேசிப்பவன். நம்மைத் தூண்டும் அல்லது உற்சாகப்படுத்தும் கதைகளில் பணியாற்ற வேண்டும் என்று எப்போதும் எனது டீமிடம் சொல்வேன். அப்படி ஒரு உற்சாகத்தைத் தராத படங்களில் பணியாற்ற விரும்புவதில்லை. என் இசையை கேட்பவர்களை நான் கஷ்டப்படுத்த மாட்டேன்’ என்றார். இந்திய படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றும்போது என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘ஒரு விருந்துக்கு செல்லும் போது அங்கு வித்தியாசமாக பேசுகிறோம். வீட்டில் அம்மாவுடன் அல்லது நண்பர்களுடன் பேசும்போது வேறு விதமாக பேசுகிறோம். அப்படித்தான் இதுவும்’ என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad