Header Ads

  • BREAKING



    12 முதல் 3 மணி வெயிலைத் தவிர்க்கும்படி எச்சரிக்கை: வானிலை மையம்.


    தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின்போது புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் ஓசோன் படலத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, பூமிக்கு அனுப்பப்படும். இந்தக் கதிர்கள் தாக்கினால் புற்றுநோய், பார்வை இழப்பு போன்றவை நேரிடும். இந்நிலையில், கோடை வெயிலால் நாடு முழுவதும் புறஊதா கதிர்களின் தாக்கம் கடந்த 2 வாரங்களில், அதன் குறியீட்டு அளவில் 11 – ஐ தாண்டி பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் உச்சமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அப்போது புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், 12 முதல் 3 மணி வரை வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad