Header Ads

  • BREAKING



    6 நாட்களில் ரூ.800 கோடி: வடமாநிலங்களிலும் வசூலை குவிக்கிறது பாகுபலி-2.


    இந்திய திரையுலக வரலாற்றில் புதிய சாதனைகள் படைத்தும், பழைய சாதனைகள் உடைத்தும் வருகிற பாகுபலி படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆறே நாட்களில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் செய்து பாகுபலி 2 சாதனை புரிந்துள்ளது. இந்தி மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள பாகுபலி-2 படம், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களை விட வசூலை வாரி குவித்து வருகிறது. வடமாநிலங்களில் திரையிட்ட ஊர்களில் எல்லாம் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்து வருகின்றனர். திரையரங்குகளை கூட்டத்தில் நிரம்ப செய்யும் அளவுக்கு பாகுபலி படத்தில் இருப்பது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள உணர்வுகளை தொட்டு எழுப்பும் காட்சி அமைப்புகளும், மன்னர் காலத்து கதை பின்னணியும் ரசிகர்கள் கவர்ந்து இழுத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் ஆறே நாட்களில் 792 கோடி ரூபாய் வசூலித்து, சாதனை படைத்திருக்கிறது. அமீர்கான் நடித்த பி.கே. படத்தின் வசூலை முறியடித்து, இந்திய திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி-2 படைத்திருக்கிறது. இன்னும் அதிக வசூலை எட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வித்தியாசமான கதைகளும், காட்சிகளுமே இனி ரசிகர்களை ஈர்க்கும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad