Header Ads

  • BREAKING



    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று முதல் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை.


    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ,உமா பாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.
    முதல் நாள் விசாரணையின் போது வேதாந்தி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த விசாரணை இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்வழக்கை தினம்தோறும் விசாரணை நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad