சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்.
கடலூர் மாவட்டம் புதூர் அருகே, பலத்த காற்றுடன் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமாகின. வழிசோதனை பாளையம், எம்.புதூர், ராமாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் நேற்று மழை பெய்தது.
சூறைக்காற்றின் தாக்கத்தால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமடைந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை