வங்கிக் கடன் பணத்தை மோசடி செய்ய உதவும் செயல்படாத நிறுவனங்கள்.
வங்கிகளில் கடனாகப் பெறப்பட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாயை மோசடி செய்ய 393 போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட 200 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள செல் நிறுவனங்கள் எனப்படும் வர்த்தகத்தில் ஈடபடாத நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கிய பலர், பணத்தை மோசடி செய்யவும், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து மீண்டும் அவற்றை அந்நிய முதலீடு என்ற பெயரில் திரும்பப் பெற்று பதுக்கி வைப்பதற்காகவும் வர்த்தகம் எதிலும் ஈடபடாத நிறுவனங்களை அணுகி இருப்பதைக் கண்டறிந்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மோசடியானது மிகவும் சிறிய அளவிலானது தான் என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை