வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க புதிய சட்டத்திருத்தம்.
வங்கி வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். அவசர சட்டத்திற்கு கடந்த புதன்கிழமை, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் வாரா கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை வங்கிகளின் வாராகடன் 6.07 லட்சம் கோடி ரூபாய் என்பதும், இதில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 5.02 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை