மாட்டிறைச்சி வைத்திருந்த குடும்பத்தினருக்கு சரமாரி அடி.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த குடும்பத்தினரை, சிலர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வாஷிம் என்ற நகரில் ஒரு குடும்பத்தினர் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த வீட்டுக்குச் சென்ற சிலர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
மாடுகள் விற்பனைமீதான கட்டுப்பாடுகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கும் நிலையில், பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அரங்கேற்றும் வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை