Header Ads

  • BREAKING



    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராட்சத ஆலங்கட்டி மழை.




    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, வானத்தில் இருந்து 10 முதல் 15 கிலோ எடையுள்ள பனிக்கட்டிகள் விழுந்ததாக கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஹொசூர் அடுத்துள்ள எஸ்.குருபட்டி, சாரகப்பள்ளி, மதகொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில், திங்கட்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. காலையில் பார்த்தபோது, ஆங்காங்கே 10 முதல் 15 கிலோ எடையுள்ள பனிக்கட்டிகள் மண்ணுக்குள் புதைந்தவாறு இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    உருகியதுபோக, மீதமிருந்த பனிக்கட்டிகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இந்த ராட்சத ஆலங்கட்டி மழையால், விவசாய தோட்டங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. உறைநிலையில் மேகத் திரள் இருக்கும்போது, பூமி பரப்பில் இருக்கும் சூடான காற்று விரைவாக சென்று மேகத்திரளை அடையும்போது, அங்கு வெடிப்பு ஏற்படுகிறது. அப்போது, பனிக்கட்டிகளாக கீழே விழுபவற்றைத்தான் ஆலங்கட்டி மழை என அழைக்கிறோம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad