பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜா சகோதரர்கள் முதலிடம்.
பிரிட்டனில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த பெரும் பணக்காரர்களில் 3 பேர் இந்திய வம்சாவழியினர் என சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகை, அதில் ஆயிரம் பேரை வரிசை படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் ஹிந்துஜா சகோதர்கள் முதல் இடத்திலும், மும்பையில் பிறந்து வளர்ந்த டேவிட் மற்றும் சைமன் 3ஆவது இடத்திலும், லட்சுமி மிட்டல் 4ஆவது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் லியோனர்ட் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 1000 பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில், இந்திய வம்சா வழியினர் 40 பேர் இடம்பிடித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை