திருமண மண்டபத்தில் சுவர் இடிந்து சரிந்து விபத்து -22 பேர் உயிரிழப்பு.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்புர் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருமண மண்டபத்தின் ஒரு பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி 22 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுவர் இடிந்ததற்கான காரணம் அந்த கட்டடத்தில் தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படாததுதான் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை