கங்கோத்ரி சென்று திரும்பிய சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் பலி.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருந்து மலைப்பகுதியில் அமைந்துள்ள கங்கோத்ரி என்ற புனிதத்தலம் சென்று 30 பயணிகளுடன் திரும்பி வந்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று தடம் புரண்டது. கிடுகிடு பள்ளத்தாக்கில் 150 அடி புரண்டு பாகீரதி ஆற்றுக்கு 50 அடி மேல் தொங்கிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து ஆற்றில் விழுந்த 22 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்தில் இருந்த 8 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை